தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் காவலர் என்ற பெருமையைப் பெற்ற சிசிலி (82), உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 1973ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவர் சட்டம்-ஒழுங்கு பிரிவின் ஆய்வாளராக பணியாற்றி, 2005ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவரது இறப்பிற்கு காவலர்கள், குடும்பத்தினர் உள்பட பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.