தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கையில் வரவை விட செலவு அதிகமாக இருப்பது பெரும் வருத்தமளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இப்பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மாநிலத்தை கடனில் இருந்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.