தமிழக அரசு முதலமைச்சரின் தலைமையின் கீழ் மாநில வன உயிரின வாரியத்தை 1972-ம் ஆண்டின் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறைப்படி மறுசீரமைத்து உத்தரவிட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் துணை தலைவராகவும், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வன உயிரின கொள்கைகள் மற்றும் அட்டவணை திருத்தங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதோடு, பழங்குடியினரின் தேவைகளையும் இவ்வாரியம் நிவர்த்தி செய்யும்.