தமிழ்நாடு 2030க்குள் $150 பில்லியன் மதிப்புள்ள மின்னணுவியல் மையமாக உயர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025 நிதியாண்டில் இந்திய மின்னணு ஏற்றுமதியில் 41% பங்குடன் $15 பில்லியன் எட்டிய மாநிலம், 2026ல் 45% ஆக உயரும் என கணிப்பு. உற்பத்தி விற்பனையில் 28.6% பங்களிப்புடன் 2வது இடம். சென்னை உள்ளிட்ட நகரங்களில் 191 உற்பத்தி அலகுகள் செயல்படுகின்றன; 2021–22 முதல் 414% ஏற்றுமதி வளர்ச்சி பதிவு.