இந்தியாவில், சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக, மாநிலங்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் 67,213 சாலை விபத்துகள் நிகழ்ந்து 18,347 பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் மட்டும் நடைபெற்ற சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நவ.24-ஆம் தேதி தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து, சிவகங்கை நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.