தமிழக வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தலைவர் உள்பட 10 பேரை நியமித்து கடந்த ஆண்டு நவ., 28 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் சவுகத் அலி முகமது வழக்கு தொடர்ந்திருந்தார். சட்ட விதிகளின்படி முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர் நியமனம் முறையாக பின்பற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பு வாதிட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ஜனவரி 19ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.