2050-ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் ஆண்டுக்கு 250 நாட்கள் வரை கடும் வெயில் நிலவும் என அரசின் புதிய ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும். பெருகிவரும் கட்டுமானங்கள் மற்றும் குப்பை கிடங்குகளே இந்த வெப்ப உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இம்மாற்றம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.