தவெக தலைவர் விஜய் குறித்து அநாகரிகமாக விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த நாட்டை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்” என்றார்.