அரசியலில் இருந்து விலகும் தமிழருவி மணியன்

16பார்த்தது
அரசியலில் இருந்து விலகும் தமிழருவி மணியன்
மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான தமிழருவி மணியன் தனது தலைமையில் இயங்கும் காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் டிச., 20ஆம் தேதி தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமாகாவுடன் இணைக்க உள்ளதாகவும், அவருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் வாசன் வலியுறுத்தினால் போட்டியிடுவது குறித்து பரீசிலனை செய்வேன் எனவும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.