முதலமைச்சர்
விஜய், தலைமைச் செயலகத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்று வழிபட்டார். இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி MLA கூறுகையில், “தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலகங்கள் மதச்சார்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும். அவரவர் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை, பிரார்த்தனைகளை அவரவர் தனி இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த மதத்தின் சடங்குகளும், பிரார்த்தனைகளும் அங்கெல்லாம் கூடாது. ஜனநாயகத் தன்மைகளை பாதுகாக்கும் வகையில், முதிர்ச்சியான
அரசியல் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும்” என்றார்.