எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டை கண்டித்து இன்று (அக்.09) முதல் தென் மண்டல டேங்கர் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென் மண்டங்களில் சுமார் 5000 லாரிகள் ஓடாது என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 1,500 லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதி கிடைக்கும் வரை லாரிகள் ஸ்டிரைக் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.