வேளாண் தொழில் முனைவோருக்கு ரூ.59 கோடி கடன் வழங்க இலக்கு

6442பார்த்தது
வேளாண் தொழில் முனைவோருக்கு ரூ.59 கோடி கடன் வழங்க இலக்கு
தென்காசி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ரூ.59 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். சேமிப்பு கிடங்குகள், குளிா்பதன கிடங்குகள், ஆலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் கட்டமைப்புகளுக்கு இந்த நிதி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.2 கோடி வரை கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி