உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நெடுஞ்சாலையில் நெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிய நெய்யை, அக்கம் பக்கத்து கிராம மக்கள் வாளிகள் மற்றும் பாத்திரங்களில் போட்டி போட்டுக்கொண்டு அள்ளி சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த காவல்துறையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
நன்றி:தந்தி