டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

5பார்த்தது
டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று (பிப்., 18) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம், ஓய்வூதியம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஏ.ஐ.டி.சி., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்தி உள்ளன. இதனால் இன்று கடைகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி