புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவு மதுபானங்களை கையிருப்பில் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே இருப்பில் வைக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறைந்த ரக மதுபானங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க பெரிய அளவில் குவிக்கப்பட்டுள்ளன.