டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக் கோரி, சென்னை மண்டலத்தில் 1,500 கடைகளைத் திறக்காமல் ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.