இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் ஜன.26-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,829 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அன்றைய தினம் இயங்காது. இந்த உத்தரவை மீறி யாரேனும் கடைகளை திறந்தாலோ அல்லது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.