பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த புகாரில் நேற்று 67 பேரும், இன்று 150 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சஸ்பெண்ட் நடவடிக்கையைத் திரும்பப் பெறும் வரை
போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்துள்ளதால், கடைகள் அடைக்கப்பட்டு மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.