பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு இன்று (பிப்.09) 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தின் முன்பு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் கடந்த 5ம் தேதி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.