பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, நாளை (பிப்., 09) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை 3 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி அமைச்சர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவுகளைத் தெரிவிப்பதாக உறுதியளித்தார். இந்த நிலையில் நாளை அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.