தவெக நிர்வாகிகள் கூட்டம்: விவசாய நிலங்கள் வழியாக குறுக்கு வழியில் புகுந்த தவெக தொண்டர்கள்

95பார்த்தது
தவெக நிர்வாகிகள் கூட்டம்: விவசாய நிலங்கள் வழியாக குறுக்கு வழியில் புகுந்த தவெக தொண்டர்கள்
வேலூரில் தற்போது நடைபெற்று வரும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், QR Code அனுமதி சீட்டு இல்லாத தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த தொண்டர்கள், விளைநிலங்களுக்குள் புகுந்து குறுக்கு வழியில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றதால் அப்பகுதியில் குழப்பம் நிலவியது. கட்டுப்பாடுகளை மீறி தொண்டர்கள் விவசாய நிலங்கள் வழியாக சென்றது அந்த இடத்திலிருந்த பாதுகாப்பு பணியில் இருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி