அத்தியாவசிய பொருளான சர்க்கரையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், கோவில்பட்டியில் டீ மற்றும் காஃபியின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே டீக்கடை உரிமையாளர்கள், சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டீ, காஃபி விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.