அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், தேசியக் கொடியை கால்களால் மிதித்து அவமதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தலைமை ஆசிரியை பதேமா காத்தூன் என்பவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில், தேசியக் கொடியை மடித்து வைப்பதற்காக கால்களை பயன்படுத்தியதாக ஆசிரியர் கூறியது தெரியவந்துள்ளது.