ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 4ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியான நிலையில், பிப்.18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்.10 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.