தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியையான பத்மா, கள்ளக்காதலுக்காக கணவர் லக்ஷ்மன்நாயக்கை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் கோபியுடன் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவரை மூச்சுத் திணறடித்து கொலை செய்துவிட்டு, மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்குச் சென்று பணியாற்றியுள்ளார். சந்தேகத்தின் பேரில் விசாரித்த போலீசார் பத்மா, கோபி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.