தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 15 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 107.6°F வெப்பமும், நுங்கம்பாக்கத்தில் 105.26°F வெப்பமும் பதிவாகியுள்ளதோடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வெயில் 100 டிகிரீயை கடந்துள்ளது.