தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில இடங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தின் 7 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருத்தணி 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 103 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 102 டிகிரி, வேலூர் மற்றும் திருச்சி 101 டிகிரி, ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையம் 100 டிகிரி என வெப்பம் பதிவாகியுள்ளது.