தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (மே 27) பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 104°F வெப்பநிலையும், தலைநகர் சென்னையில் 103°F வெப்பநிலையும் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. மேலும் மதுரை, திருச்சி, பரங்கிப்பேட்டை, ஈரோடு, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் வெயில் 100°F-ஐ கடந்து சுட்டெரித்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடுமையான இந்த வெப்ப அலை காரணமாக, மதிய நேரங்களில் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.