திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே பணம் வசூலில் ஈடுபட்ட விவகாரத்தில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அர்ச்சகர் ஐயப்பன், காவல் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ராணுவ வீரர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் கூறுகையில், "திருச்செந்தூர் கோயிலில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகரோடு இணைந்து உடந்தையாக இருந்த 2 வாயிற்காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.