விருதுநகர்: ராஜபாளையம் அருகே கோயிலுக்குள் காவலாளிகள் 2 பேர் கொலையில் தொடர்புடைய நாகராஜ் என்பவர் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலாளிகள் பேச்சுமுத்து, சக்கரபாணி ஆகியோரை நேற்று (நவ., 11) நள்ளிரவு மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த நிலையில், போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை போலீசார் தற்போது சுட்டுப்பிடித்தனர்.