மீண்டும் திறக்கப்பட்ட கோயில்.. போலீசார் முன்பே இருதரப்பும் மோதல்

5920பார்த்தது
மதுரை மாவட்டம் மேட்டுநீரேத்தான் அருகே 6 மாதங்களுக்கு முன் வைகாசித் திருவிழா நடைபெற்றது. அப்போது கோயில் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட மோதல், நீதிமன்றம் வரைச் சென்றது. நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட கோயில் இன்று (செப்.21) மீண்டும் திறக்கப்பட்டது. கோயில் திறப்புக்காக அழகர்கோவில் தீர்த்தத்துடன் வந்த ஒரு தரப்புக்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் முன்பே இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கோயில் வளாகம் பரபரப்பானது.

நன்றி: polimer

தொடர்புடைய செய்தி