தென்காசி விபத்து: 8 பேர் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

12பார்த்தது
தென்காசி விபத்து: 8 பேர் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே  இன்று (நவ.24) நேர்ந்த பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இச்செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்த அவர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி