ஆலங்குளம் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது

1பார்த்தது
ஆலங்குளம் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தூய பேதுரு டி டி டி ஏ நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பள்ளி தாளாளா் கிங்ஸ் ஹமில்டன் சாமுவேல் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கண்ணன் வரவேற்றாா். சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல மேலாளா் ஸ்டீபன் முல்லா் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா். திருநெல்வேலி தனியாா் கணினி நிறுவனம் சாா்பில் பள்ளிக்கு ஸ்மாா்ட் டிவியும், ஆசிரியா்கள் சாா்பில் மேஜை, இருக்கையும் வழங்கப்பட்டன. இதில் சேகரத் தலைவா் வில்சன், முன்னாள் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி