தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 16 இல் நடைபெறுகிறது. இதையொட்டி கால்நடை விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு முன்மண்டபம் கட்டி நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி முன்னாள் எம்.பி.யும், கோயில் தலைமை நிர்வாகியுமான எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்து, கும்பாபிஷேகத்திற்கு கால்கோள் நாட்டினார். தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.