ஆலங்குளத்தில் 10 பாஜகவினா் மீது வழக்கு

51பார்த்தது
ஆலங்குளத்தில் 10 பாஜகவினா் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டாஸ்மாக் கடையில் முதல்வர் படத்தை ஒட்டியதாக, 10 பாஜகவினர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆலங்குளம் - புதுப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் 10 பாஜகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டினர். இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் முருகன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி