தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் பள்ளியில் வைத்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குழல்வாய்மொழியம்மாள் சிவன்நாடார் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் சிவப்பிரசாத், செயலர் சிவதீப்ஜினிஸ்ராம், முதல்வர்கள் பொன் மனோன்யா, புஷ்பா மற்றும் தலைமையாசிரியர் முருகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து தேவதை போன்ற வேடமணிந்தும் கிறிஸ்து பிறப்பினை நடித்துக் காட்டினர். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.