தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சண்முகாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த மணிமுத்து(85) என்பவர் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாத நிலையில், அவரது மகன் சந்தோஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குளத்தில் அவரது சடலம் மிதப்பதாகத் தெரியவந்தது. ஆலங்குளம் போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.