தென்காசி: கோடைகால வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆட்சியா் அறிவுரை

62பார்த்தது
தென்காசி: கோடைகால வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆட்சியா் அறிவுரை
கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல்கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடைகாலங்களில் திடீரென ஏற்படும் தொற்று நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு சுயமருத்துவம் மேற்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். கோடை வெயில் காலங்களில் தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி அருந்தும்போது, தண்ணீர் மூலம் பரவும் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி