தென்காசி குருசாமிபுரம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா

59பார்த்தது
தென்காசி குருசாமிபுரம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் அமைந்துள்ள முப்புறகோட்டை ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது. விழாவின் முதல் நாளான 9ஆம் தேதியன்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் 108 திருவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. விழாவின் 2ஆம் நாளான 10ஆம் தேதி காலை குற்றாலத்தில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகாலபூஜையும், நள்ளிரவு சாம பூஜையும் நடைபெற்றது. காலை பொங்கலிடுதல், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் அம்மன் மஞ்சள் நீராடுதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி