தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் கடுமையாக இருந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் ஒன்றரை மணி நேரம் நீடித்த மழையால் தெருக்களிலும் சாலைகளிலும் வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகமும் மழை நீரால் சூழ்ந்தது. பேரூராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.