ஆலங்குளம்: ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது

692பார்த்தது
ஆலங்குளம்: ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸார், சட்டவிரோதமாக 300 மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்ட பயணிகளின் ஆட்டோவை சோதனையிட்டனர். இதில், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் காமராஜா்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (44) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆட்டோ மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி