தென்காசி: கடன் பிரச்சினையால் தற்கொலை முயற்சி.. போலீசார் விசாரணை

59பார்த்தது
தென்காசி: கடன் பிரச்சினையால் தற்கொலை முயற்சி.. போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் அருகில் இன்று (டிசம்பர் 22) காலையில் மாஞ்சோலை தெருவை சேர்ந்த கைகுண்டம் மகன் வெங்கடேஷ்(25). என்பவர் கடன் பிரச்சினையால் வீட்டில் இருந்தால் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சாம்பவர்வடகரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி