தென்காசி: மாடு மேய்க்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

51பார்த்தது
தென்காசி: மாடு மேய்க்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே மேலபட்டமுடையார்புரம் தன்பத்து குளத்துக் கரையில் விவசாய நிலத்தில் மின்வயர் தாழ்வாகக் கிடந்துள்ளது. அதைக் கவனிக்காமல் அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மேலபட்டமுடையார்புரத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை(69) மின்வயரை 
மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி