ஆலங்குளம் அருகே இளைஞா் கொலை: போலீசார் விசாரணை

82பார்த்தது
ஆலங்குளம் அருகே இளைஞா் கொலை: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த பால்துரை மகன் கார்த்திகை குமார் (38). இவர் தனது மனைவி ஊரான ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரிக்கு கோயில் திருவிழாவிற்காக சென்றிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ் (31) என்பவருடன் சேர்ந்து மதுக்குடித்தாராம்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதில், சுரேஷ் அங்கு கிடந்த கல்லால் கார்த்திகை குமாரை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி