சங்கர விநாயகர் கோவிலில் பிரதோஷம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

1பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சந்தாவில் அமைந்துள்ள அருள்மிகு சங்கர விநாயகர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் முன்பு உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. இதில் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.