தென்காசி மாவட்டம் ஊத்துமலையில், சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி மூலம் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் குழாய் அமைக்கும் பணியை தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடாா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி ராஜா, ஊத்துமலை ஊராட்சித் தலைவா் பிச்சம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, எம்எல்ஏவை முற்றுகையிட்ட ஊத்துமலை பொதுமக்கள், சுரண்டை இரட்டை குளம்- ஊத்துமலை கால்வாய் இணைப்பு திட்டப் பணிகள் எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினா்.