தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாப்பன்குளம் கிராமத்தில் கோயில் பின்புறம் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றித்திரிந்ததை கண்ட பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனர். பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.