ஆலங்குளத்தில் வாடகை பாக்கி: 3 கடைகளுக்குப் பூட்டு

0பார்த்தது
ஆலங்குளத்தில் வாடகை பாக்கி: 3 கடைகளுக்குப் பூட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வணிக வளாகம் வலுவிழந்து காணப்பட்டது. இதை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைகளை காலி செய்ய அவகாசம் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு அளித்திருந்த கடைக்காரர்களில் சிலர், வாடகை பாக்கியை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையாளர் கடிதம் அனுப்பியிருந்தார். இருப்பினும், மூன்று கடைக்காரர்கள் வாடகையை செலுத்தாததால், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்புடன், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அந்தக் கடைகளுக்குப் பூட்டு போட்டனர்.

தொடர்புடைய செய்தி