திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க கோரிக்கை

306பார்த்தது
திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரியப்பபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள திரவிய நகா் பேருந்து நிறுத்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, அப்பேருந்து நிறுத்தம் மிகவும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பாழடைந்து காணப்படும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி