தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்த அந்தோணி செல்வராஜ்(43) என்பவர் கடையில் குட்கா விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 6 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது. விசாரணையில், ராம்நகரில் உணவகம் நடத்தி வரும் அழகு மகன் சபரிநாதன்(28) என்பவர் குட்காவை விநியோகம் செய்தது தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.